Published : 27 Aug 2022 04:44 AM
Last Updated : 27 Aug 2022 04:44 AM
புதுடெல்லி: உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியல் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 75 சதவீத ஒட்டுக்களுடன் பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளார்.
மார்னிங் கன்சல்ட் சர்வே என்ற அமைப்பு மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 75 சதவீத ஓட்டுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார்.
மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஆப்ரடர் 63 சதவீத ஓட்டுக்களுடன் 2-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 54 சதவீத ஓட்டுக்களுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர். உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் கணக்கெடுப்பில் உலகத் தலைவர்கள் 22 பேர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவீத ஓட்டுக்களுடன் 5-வது இடம் பிடித்துள்ளார். கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீத ஓட்டுக்களையும், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 38 சதவீத ஓட்டுக்களையும் பெற்றுள்ளனர்.
கடந்த ஜனவரி மற்றும் கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பிலும், பிரதமர் மோடி பிரபல உலகத் தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தார். மார்னிங் கன்சல்ட் தளம் தேர்தல்கள், தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள், ஓட்டுப்பதிவு விஷயங்கள் குறித்த நிகழ்நேர தகவல்களை அளிக்கிறது. இந்ததளம் தினந் தோறும் 20,000-க்கும் மேற்பட்ட நேர்காணல்களை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT