Published : 21 Oct 2016 10:02 AM
Last Updated : 21 Oct 2016 10:02 AM

திருமலை வரும் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு முன்பணம் செலுத்த வேண்டாம்: தேவஸ்தான நிர்வாக அதிகாரி தகவல்

திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு வரும் 24-ம் தேதி முதல் முன்பணம் செலுத்தும் முறை ரத்து செய்யப் படுகிறது.

திருமலையில் உள்ள ஏழுமலை யான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள் கட்டப் பட்டுள்ளன. இதுதவிர, பல தொழிலதிபர்கள் சொகுசு விடுதி களையும் கட்டிக் கொடுத்துள்ளனர். சாதாரண பக்தர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை இங்குள்ள 6,400 அறைகளில் தங்கி சுவாமியை தரிசித்து வருகின்றனர். இந்த அறைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 50 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதில் தங்க விரும்புகிறவர் களிடம் 2 நாள் கட்டணம் முன்பணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரே நாளில் அறையை காலி செய்யும் பக்தர்களுக்கு மீதமுள்ள ஒருநாள் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது. இதனால் நேரம் வீணாவதாக பக்தர்கள் தேவஸ் தான நிர்வாகத்திடம் புகார் செய் தனர். இதைப் பரிசீலித்த தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், விடுதி அறைகளுக்கு முன்பணம் வசூலிக் கும் முறை வரும் 24-ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என்று நேற்று அறிவித்தார்.

இதன்படி, பக்தர்கள் ஒருநாள் கட்டணத்தை மட்டுமே செலுத்தி அறையைப் பெறலாம். 24 மணி நேரத்தில் அறையை காலி செய்ய வேண்டும். இந்த முறை திருப்பதி யில் உள்ள தேவஸ்தான விடுதி களிலும் படிப்படியாக அமல்படுத் தப்படும் என தேவஸ்தான விடுதிகளுக்கான துணை நிர்வாக அதிகாரி ஹரீந்திரா ரெட்டி ‘தி இந்து’ விடம் நேற்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x