Published : 04 Oct 2016 08:21 AM
Last Updated : 04 Oct 2016 08:21 AM

ஆந்திர தலைநகர் அமராவதியில் புதிய தலைமை செயலகத்தில் பணிகள் தொடக்கம்

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக உருவாகி வரும் அமராவதியில் உள்ள புதிய தலைமைச் செயலகத்தில் அலுவல் பணிகள் நேற்று தொடங்கின. வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள குளிர்காலக் கூட்டத் தொடர் புதிதாக கட்டப்பட்டு வரும் சட்டப்பேரவையில் நடைபெறும் என பேரவைத் தலைவர் கோடல சிவப்பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விஜயவாடா-குண்டூர் இடையே 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமான அமராவதி உருவாகி வருகிறது. முதற்கட்டமாக வெலகபுடி பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே சில துறைகள் இயங்கி வரும் நிலையில் நேற்று அனைத்துத் துறையை சேர்ந்தவர்களும் ஹைதராபாத்தில் இருந்து வெலகபுடிக்கு வந்தனர். இவர்களை மற்ற துறை அரசு ஊழியர்கள் வரவேற்றனர். பின்னர் இவர்கள் தொடர்புடைய துறையில் தங்களது அலுவலக பணிகளைத் தொடங்கினர். இவ்வாறு கோடல சிவப்பிரசாத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x