Published : 03 Oct 2016 10:13 AM
Last Updated : 03 Oct 2016 10:13 AM
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேற்றப் பட்ட பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் இருவரும் இணைந்து நேற்று புதிய கட்சி தொடங்கினர். அக்கட்சிக்கு ஸ்வராஜ் இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அக்கட்சியில் இருந்து இருவரும் சிலகாலம் விலகி இருந்தனர். இந்த சூழலில் நேற்று ஸ்வராஜ் இந்தியா என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT