Published : 23 Aug 2022 11:29 AM
Last Updated : 23 Aug 2022 11:29 AM
டிக் டாக் மூலம் பிரபலமானவரும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. கோவா சென்றிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
சோனாலியின் அகால மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது டிக்டாக் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோனாலி போகத் 2006 தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அறிமுகமானார். பின்னர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானார். 2008ல் அவர் பாஜகவில் இணைந்தார்.
ஹரியாணாவில் கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் சோனாலி போகத் பாஜக சார்பில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் பிரமுகர் குல்தீப் பிஷ்ணோயை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.
தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் கடந்த மாதம் அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பாஜகவில் இருந்தார்.
இந்நிலையில், சோனாலி போகத்தை கடந்த வாரம் குல்தீப் பிஷ்ணோய் சந்தித்தார். ஆதம்பூர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் சோனாலியை நிறுத்துவது பற்றி இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கோவா சென்றிருந்த சோனாலி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த ரியாலிட்டி ஷோ மூலம் அவருக்கு இன்னும் ரசிகர்கள் அதிகமாயினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT