Published : 26 Oct 2016 10:04 AM
Last Updated : 26 Oct 2016 10:04 AM
கிழக்கு கோதாவரி மாவட்டம், கட்டுமூரு பகுதியில் இறால் பண்ணையில் பணியாற்றிய தொழிலாளர்கள் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தனர்.
இவர்கள் காகிநாடாவில் உள்ள சஞ்சீவினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க ஆந்திர துணை முதல் வரும், உள்துறை அமைச்சருமான சின்ன ராஜப்பா நேற்று சென்றார். 3-வது மாடியில் நோயாளிகளைப் பார்த்த பிறகு துணை முதல்வர் அங்கிருந்து லிப்ட் மூலம் கீழ் தளத்திற்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் மெய்காப்பாளர், பத்திரிக்கை புகைப்பட நிபுணர் மற்றும் அரசு அதிகாரிகளும் உடன் வந்தனர். அப்போது திடீரென லிப்ட் அறுந்து கீழ் தளத்தில் வந்து நின்றது. இதில் லிஃப்டில் வந்த அனைவரும் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தனர். இந்த விபத்தில் துணை முதல்வர் சின்ன ராஜப்பாவுக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அதே மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் கழித்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, “துணை முதல்வ ருடன் பலர் லிஃப்டில் வந்ததால் எடை தாங்காமல் அது அறுந்ததாக தெரியவந்துள்ளது. துணை முதல்வருக்கு முதுகுத்தண்டில் லேசாய காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT