Last Updated : 12 Oct, 2016 12:57 PM

 

Published : 12 Oct 2016 12:57 PM
Last Updated : 12 Oct 2016 12:57 PM

மூன்றாவது நாளாக தொடரும் பாம்போர் என்கவுன்ட்டர்

காஷ்மீரின் பாம்ப்போர் பகுதியில் அரசுக் கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டை மூன்றாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது.

இந்தச் சண்டையில் இன்று காலை மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இரண்டாவதாக ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு தீவிரவாதி பதுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

திங்கள் கிழமை தொடங்கிய சண்டை:

முன்னதாக திங்கள் கிழமை அதிகாலை வாக்கில் பாம்ப்போர் பகுதியில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக கட்டிடத்தில் 2 அல்லது 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது.

இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்தக் கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

2-வது முறையாக..

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் இதே கட்டிடத்தை தீவிரவாதிகள் குறிவைத்தனர். அப்போது 48 மணி நேரம் நீடித்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அதிகாரி உட்பட 2 ராணுவ வீரர்கள், இன்னொரு ஊழியர், 3 தீவிரவாதிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

பாம்போர் தாக்குதல் வீடியோ: