Published : 17 Oct 2016 09:29 AM
Last Updated : 17 Oct 2016 09:29 AM
கடந்த 5-ம் தேதி ஜம்முவில் உள்ள விக்ரம் சவுக் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி 3 பேர் வாழைப்பழப் பெட்டியில் 150-க்கும் மேற்பட்ட புறாக்களை கடத்திச் சென்றனர். அவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் ‘சேவ்’ என்ற தொண்டு நிறுவனத்திடம் அந்த புறாக்களை ஒப்படைத்தனர். அந்தப் புறாக் களைப் பார்த்த தொண்டு நிறு வனத்தின் தலைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடி யாக ஜம்மு போலீஸ் துணை கமிஷனருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து ‘சேவ்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நம்ரதா ஹக்கூ கூறும்போது, ‘‘புறாக்களின் கால் நகங்களில் உலோக வளை யமும், காந்த சக்தி கொண்ட வளையங்களும் மாட்டப்பட்டிருந் தன. அவை சந்தேகத்தை எழுப்பு கின்றன. அவை உளவு பார்ப் பதற்காக கடத்திச் சென்றிருக்க லாம்’’ என்றார்.
கடந்த மாதம் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்து வந்த ஒரு புறாவின் கால்களில், உருது மொழியில் எழுதப்பட்ட கடிதம் இருந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT