Published : 24 Oct 2016 12:11 PM
Last Updated : 24 Oct 2016 12:11 PM
ஆந்திரா ஒடிஷா மாநில எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த 7 பெண்கள் உட்பட 24 மாவோயிஸ்ட்களை ஆயுதப் படை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதில் போலீஸ் தரப்பில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து ஆந்திராவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆந்திர மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் நேற்று விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திரா - ஒடிஷா மாநில எல்லை யில் மல்காங்கிரி மாவட்டம், ராம் கூர்கா வனப்பகுதியில் மாவோ யிஸ்ட்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத் தது. இதையடுத்து ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களை சேர்ந்த ஆயுதப்படை போலீஸார் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். இதை அறிந்த மாவோயிஸ்ட்கள் ஆயுதப்படை போலீஸாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதை யடுத்து மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் 7 பெண் மாவோயிஸ்ட்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். ஆயுதப் படை போலீஸ் தரப்பில் விசாகப் பட்டினத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் அபுபக்கர் உயிரிழந்தார். படுகாய மடைந்த மற்றொருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஆயுதங்கள் பறிமுதல்
இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்த ராம்கூர்கா வனப்பகுதியில் இருந்து 4 ஏகே 47 ரக துப்பாக்கிகள், எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகள், கண்ணி வெடிகள், வெடி மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ. 2.16 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி யில் இருந்து 50 பைகள் கண்டெடுக் கப்பட்டிருப்பதால் உயிரிழந்த வர்களை தவிர, எஞ்சிய 26 பேர் தப்பிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவோ யிஸ்ட்களின் முக்கிய தலைவர் களில் சிலரும் இந்த என்கவுன்டரில் கொல்லப் பட்டதாக போலீஸார் தெரிவிக் கின்றனர். ஆலோசனை நடத்துவதற் காக கூடிய மாவோயிஸ்ட்களை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல் எனக் கூறி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் உடல்களை வரும் வியாழக்கிழமை வரை பிரேதப் பரிசோதனை நடத்து வதற்கு தடை விதித்து, வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

பாதுகாப்பு அதிகரிப்பு
மாவோயிஸ்ட்கள் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சபாநாயகர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தெலங்கானா விலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT