Published : 11 Aug 2022 05:41 AM
Last Updated : 11 Aug 2022 05:41 AM

சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: ஜனவரி 1, 2018 அன்று மகாராஷ்டிர மாநிலம் பீமாகோரேகானில் நடைபெற்ற கலவரத்துக்கு காரணமாக இருந்ததாகக் கூறி, சமூக ஆர்வலர் வரவர ராவ் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மும்பை உயர் நீதிமன்றம் அவரை இடைக்கால ஜாமீனில் விடுவித்தது. தனக்கு நிரந்தர ஜாமீன் வழங்க வேண்டும் என்று வரவர ராவ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், மும்பைஉயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதை எதிர்த்து வரவர ராவ்உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தற்போது வரவர ராவுக்கு 83 வயதாகிறது. அவரதுஉடல் நிலையைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x