Published : 22 Oct 2016 03:17 PM
Last Updated : 22 Oct 2016 03:17 PM
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய ஹோமியோபதி கவுன்சில் தலைவர் ராம்ஜீ சிங் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது.
ஹோமியோபதி கல்லூரி ஒன்றைத் திறக்க சாதகமான அறிக்கை அளிக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டில் சிபிஐ இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2012-ம் ஆண்டு அப்போதைய இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் மற்றும் அகமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றின் நரம்பியல் துறை தலைவருமான ஒருவரையும் இந்திய மருத்துவ கவுன்சில் கூடுதல் ஆய்வாளரும் பரேலியில் செயல்படும் தனியார் மருத்துவக் கழகத்தின் இயக்குநர் மற்றும் டீனையும் கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த வழக்கை ஒத்த வழக்காகும் இது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
அதே வழக்கிலும் சாதகமான அறிக்கைக்காக லஞ்சம் பெற்றதாகவே குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மத்திய ஹோமியோபதி கவுன்சில் தலைவர் ராம்ஜீ சிங் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வரும் துறை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT