Published : 22 Jun 2014 12:34 PM
Last Updated : 22 Jun 2014 12:34 PM
தங்களின் உதவியாளர்களாக நிய மிக்க மத்திய அமைச்சர்கள் பரிந் துரைத்த 40 பேரை, மத்திய அமைச்சக செயலாளர் ஆலோ சனைக்குழு நிராகரித்துள்ளது.
அமைச்சர்களின் உதவியாளர் நியமனம் தொடர்பாக புதிய விதி முறைகளை பிரதமர் அலுவலகம் விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.
புதிய அரசில் பெரும்பாலான அமைச்சர்கள் தங்கள் நேர் முக உதவியாளர்கள் மற்றும் தனிச் செயலாளர்களை இன்னும் நியமிக்க முடியாமல்உள்ளனர். மத்திய அமைச்சக ஆலோசனைக் குழு அங்கீகரித்த பிறகே உதவி யாளர்களை நியமிக்கவேண்டும் என பிரதமர் மோடி உத்தர விட்டுள்ளதே இதற்குக்காரணம். மத்திய அமைச்சர்கள் தங்களின் தனிச் செயலாளர்களாக நியமிப்பதற்கான பரிந்துரைகளை அமைச்சக ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு அனுப்பி வைத்த பட்டிய லில் இதுவரை 40 பெயர்கள் நிராகரிக் கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அமைச்சக வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
ஒருசில ஆண்டுகளில் கூடுதல் செயலாளர்களாக பதவி உயர்வு பெற இருப்பவர்கள், கடந்த அமைச் சரவை உறுப்பினர்களிடம் பணி யாற்றியவர்கள், புகார்களுக் குள்ளானவர்கள் மற்றும் வழக்கு களில் சிக்கியவர்கள் ஆகி யோரை உதவியாளர்களாக நியமிக் கக் கூடாது என பிரதமர் கூறியுள்ளார். இதனால், பல்வேறு நபர்கள் இந்த விதிமுறைகள் காரணமாக நிரா கரிக்கப்பட்டுவிட்டனர். இன்னும் ஓரிரு நாளில், புதிய விதிமுறைகளை பிரதமர் அலுவலகம் வெளியிடும் எனத் தெரிகிறது, என்றனர்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் முக்கியத் தலைவர்களின் பரிந்து ரையுடன் வருபவர்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படுவதாகக் கூறப் படுகிறது. அதேசமயம், அவர்களும் தீவிர விசாரணைக்குப் பிறகே பணிய மர்த்தப்படுவதாகவும் அமைச் சக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
தொடக்கத்தில் மூன்று வருடத் திற்கு மட்டும் என்றிருந்த மத்திய அரசு பணி, ஐந்தாகி இப்போது பத்து ஆண்டுகளாகி விட்டது. இதனால், ஓரிரு வருடங்களில் இணைச் செயலாளராக பதவி உயர்வு பெறுபவர்கள், அதுவரை அமைச்சரிடம் உதவியாளராக இருந்து விட்டு பிறகு மத்திய அர சின் வேறு பணிகளுக்கு தாவி விடுகின்றனர். அமைச்சரின் உதவி யாளர் பணியை ஒரு நுழைவு வாயிலாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதால், 2000-வது ஆண்டிற்கு பிறகு ஐஏஎஸ் முடித்தவர்களை எடுக்க மோடி தடை விதித்துள்ள தாகக் கூறப்படுகிறது.
சிலர் தாம் பணியாற்றும் மாநில அரசுகளின் ஆட்சியாளர் களின் இலக்குகளில் இருந்து தப்ப அமைச்சர்களின் உதவியாளர் கள் பணிக்கு சென்று விட விரும்பு கிறார்கள் எனக் கருதப்படுகிறது. மத்திய அமைச்சரின் தனி உதவி யாளர் பணியில் சேர்வதற்காக 50-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கள் தம் மாநில அரசுகளிடம் நீண்ட விடுப்பு பெற்று டெல்லி யில் முகாமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இது பற்றிய விரிவான செய்தி, ‘தி இந்து’வில் கடந்த வியாழக்கிழமை வெளியானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT