Published : 29 Jul 2022 12:14 AM
Last Updated : 29 Jul 2022 12:14 AM

ராஜஸ்தானில் விமானப்படை விமானம் நொறுங்கி விபத்து - 2 விமானிகள் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப்படை பயிற்சியின்போது மிக்-21 ஜெட் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்திய விமானப்படையின் மிக்-21 ஜெட் விமானம் ராஜஸ்தானில் உள்ள உதர்லாய் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இரவு 9:10 மணியளவில் பார்மர் பகுதி அருகே விமானம் பறந்தபோது விபத்துக்குள்ளானது. இரு விமானிகளும் படுகாயமடைந்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் உயிரிழந்தனர். இருவரின் உயிரிழப்பு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய விமானப்படை மூத்த அதிகாரி ஒருவர், "விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். மிக்-21 ஜெட் போர் விமானம் இந்திய கடற்படையின் முதுகெலும்பாக இருந்துவருகிறது. இந்திய-சீனப் போருக்குப் பிறகு, 1960களில் இந்திய விமானப்படையில் முதல்முறையாக மிக்-21 சேர்க்கப்பட்டது. 2006ல் மிக்-21 பைசன் ரகம் அப்டேட் வெர்சனாக இணைந்தது. இந்த ரக விமானத்தில் மல்டி-மோட் ரேடார்கள், சிறந்த ஏவியோனிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x