Published : 27 Jul 2022 05:26 AM
Last Updated : 27 Jul 2022 05:26 AM
பாட்னா: தந்தையால் கைவிடப்பட்ட பிஹார் சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பில் 99.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
பிஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் சிறுமி ஸ்ரீஜா. அவரது தாயார் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து ஸ்ரீஜாவை, மனைவியின் தாயார் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார் அவரது தந்தை. தாய் இறந்து தந்தைகைவிட்டு விட்டதால் மன வருத்தத்தில் இருந்த ஸ்ரீஜாவை அவரதுபாட்டி தேற்றி பள்ளிக்கு அனுப்பினார். சில மாதங்களுக்கு முன்பு 10-ம் வகுப்புத் தேர்வை ஸ்ரீஜா எழுதியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. இதில் ஸ்ரீஜா 99.4 சதவீதமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இந்த விஷயம் பாஜக எம்.பி. வருண் காந்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஸ்ரீஜாவின் சாதனையை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைலராகியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீஜாவின் பாட்டிகூறும்போது, “எனது மகள் இறப்பின்போது பேத்தி ஸ்ரீஜாவை என் வீட்டில், தந்தை விட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் இங்கு வரவேயில்லை. அவர் வேறொரு திருமணம் செய்துகொண்டதாக கேள்விப்பட்டேன். இப்போது என் பேத்தியின் 10-ம் வகுப்பு தேர்வு முடிவை அவர் பார்த்திருப்பார். தன் மகளை விட்டுச் சென்றதற்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார்” என்றார்.
தேர்வில் சாதனை வெற்றி பெற்ற ஸ்ரீஜாவுக்கு எம்.பி. வருண் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT