Published : 29 Sep 2016 01:08 PM
Last Updated : 29 Sep 2016 01:08 PM

கட்ஜு சர்ச்சை: ‘சகுனி மாமா’ கருத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு

மார்க்கண்டேய கட்ஜு தனது சமூக வலைத்தளத்தில் காஷ்மீர், பிஹார் குறித்த கருத்துகளுக்கு தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தன்னை ‘சகுனிமாமா’ என்று அழைத்துக் கொண்ட பதிவு தொடர்பாக தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதலில் பாகிஸ்தான் காஷ்மீர் வேண்டுமென்று ஆசைப்பட்டால் பிஹாரையும் கூடுதலாக எடுத்துக் கொள்ளட்டும் என்று பதிவிட்டார். பிற்பாடு கடும் விமர்சனங்கள் எழ சீரியசாக அல்ல சாதாரணமாகவே சொன்னேன் என்று கூறினார். ஆனால் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், கட்ஜுவை நோக்கி ‘பிஹாரைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனோ?’ என்று கேலி செய்தார்.

இதற்கு பதில் அளித்த கட்ஜு, “நான் ஆபத்பாந்தவன் அல்ல சகுனி மாமா” என்று கூறி பிறகு ஒருமணி நேரம் கழித்து மீண்டும் என்னைப்பற்றி ஐ.நா.வில் வேண்டுமானால் புகார் அளிக்கட்டும், திரவுபதி துகிலுரி படலத்தில் தன் மானத்தைக் காப்பாற்றுமாறு பகவான் கிருஷ்ணரை அழைத்தார், என்றார் மேலும் சீண்டினார்.

அதாவது தான் பிஹார்-திரவுபதியின் துகிலை உரியும் சகுனி எனவே ஐநா/கிருஷ்ணரை அழையுங்கள் என்பதுதான் கட்ஜுவின் செய்தி.

இது ஐக்கிய ஜனதாதள எம்.எல்.சி. நீரஜ் குமாரை கடுப்பேற்ற, பாட்னா காவல் நிலையத்தில் 124-ஏ பிரிவின் கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்தார். மேலும், “நாங்கல் ஐநா.வுக்குச் செல்ல வேண்டியதில்லை, இங்குள்ள சட்டங்களே அவருக்குப் போதுமானது. அவர் பாட்னா பெயூர் சிறைக்குச் செல்ல ஆயத்தமாகி விட்டார்.

பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அர்விந்த் குமாரும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x