Published : 30 Sep 2016 10:59 AM
Last Updated : 30 Sep 2016 10:59 AM
தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்தது. இதில் ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் மிதந்தது. பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில் பொது இடங் கள் மற்றும் நீர்நிலைகளை ஆக் கிரமித்து கட்டிடங்கள் கட்டியதே வீடுகளில் வெள்ளம் புகுந்ததற் கான காரணம் என புகார் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி அதி காரிகள் மேற்கொண்ட ஆய்வில் ஹைதராபாத் நகரில் சுமார் 28,000 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அமைச்சர்கள் கடியம் ஹரி, லட்சுமி ரெட்டி, கே. டி. ராமாராவ், தலைமைச் செய லாளர் ராஜேஷ்வர், ஹைதராபாத் மாநகராட்சி மேயர் ராம்மோகன் மற்றும் போலீஸ் உயரதிகாரி களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் அவரச ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார்.
இதன்பேரில் கடந்த 4 நாட் களாக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து வருகின்றனர். இதில் நேற்று வரை 768 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT