Published : 23 Jul 2022 07:43 PM
Last Updated : 23 Jul 2022 07:43 PM
சென்னை: இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்கவுள்ள திரவுபதி முர்முவை சிறப்பிக்கும் விதமாக டூடுல் வெளியிட்டுள்ளது அமுல் இந்தியா நிறுவனம். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் திரவுபதி முர்மு. 64 சதவீத வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றிருந்தார் அவர். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என அறியப்படுகிறார்.
இந்நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குடியரசுத் தலைவர் மாளிகை பின்புறத்தில் இருக்க அமுலின் டிரேட் மார்க் சின்னமாக உள்ள அமுல் பேபி, திரவுபதி முர்மு ஸ்டைலில் கத்தரிப்பூ நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவையில் வணக்கம் வைக்கிறது.
இந்த டூடுலை அமுல் நிறுவனம் பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. நெட்டிசன்கள் அதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT