Published : 21 Jul 2022 06:36 AM
Last Updated : 21 Jul 2022 06:36 AM

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் இந்தியாவின் தூதர்களே: பிரதமர் மோடி புகழாரம்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இதில் வீரர், வீராங்கனைகளுடன் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குரும் கலந்து கொண்டார். படம் : பிடிஐ

புதுடெல்லி: பர்மிங்காம் காமன்வெல்த் விளை யாட்டில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் புதிய இந்தியாவின் தூதர்களே என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

காமன்வெல்த் விளையாட்டு 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 215 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். அந்த வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது வீரர்களின் விளை யாட்டு மற்றும் வாழ்க்கை அனு பவங்களைக் கேட்டறிந்தார். மெகாவிளையாட்டில் பங்கேற்கும் நிகழ்வுக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசும்போது,‘‘காமன்வெல்த் விளையாட்டுக்குழு தனித்துவமானது, ஏனெனில்அது ஒரு தனித்துவமான அனுபவத் தையும் இளமை ஆர்வத்தையும் கொண்டுள்ளது.

அனைத்து விளையாட்டு வீரர்களும் புதிய இந்தியாவின் தூதர்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் விளையாட்டுத் திறமைகள் நிறைந்துள்ளன என்பதை நீங்கள் நிரூபிக்கிறீர்கள்” என்றார்.

முதன்முறையாக சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் குறித்து பேசும் போது, “சர்வதேச அரங்கில் முதன்முறையாக நுழையும் உங்களுக்கு மைதானம் மட்டுமே மாறியுள்ளதே தவிர உங்கள் மன நிலையும், உறுதிப்பாடும் அல்ல.

மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்ப்பதும், தேசிய கீதம்இசைக்கப்படுவதைக் கேட்பதும்தான் நமது குறிக்கோள். அதனால்தான் பதற்றம் இல்லாமல், எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் நல்ல மற்றும் வலுவான ஆட்டத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துங்கள்” என்றார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தஹாக்கி வீராங்கனையான சலிமா டெட்டுடன் பிரதமர் உரையாடினார். சிறுவயதில் ஹாக்கி விளையாடுவதில் தான் சந்தித்த போராட்டங்களை சலிமா பகிர்ந்து கொண்டார். அப்போது தனது தந்தை ஹாக்கிவிளையாடுவதை பார்க்க சைக்கிளில் பயணம் செய்தததை நினைவுகூர்ந்தார். போராட்டங்களில் இருந்து நிறைய சாதிக்க முடியும் என்பதை எனது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டதாக சலிமாதெரிவித்தார்.

இறுதியாக அந்தமான் நிக்கோபர் தீவுகளைச் சேர்ந்த சைக்கிள் வீரர் டேவிட் பெக்காமுடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது, புகழ்பெற்ற கால்பந்து வீரரின் பெயரைக்கொண்டுள்ளதால் அவருக்கு கால்பந்து மீது ஆர்வம் உள்ளதா என்றுகேட்டார்.

இதற்கு பெக்காம் கூறும்போது, “தனக்கு கால்பந்தாட்டத்தில் ஆர்வம் உள்ளது. ஆனால் விளையாடுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கால்பந்தை விட்டுவிட்டேன்” என்றார்.

2020-ம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டில் சைக்கிள் ஓட்டுதலில் டேவிட் பெக்காம் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதை 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டு பேசியது ஊக்கமளித்தது என்றும் டேவிட் பெக்காம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x