Published : 20 Jul 2022 06:52 PM
Last Updated : 20 Jul 2022 06:52 PM

அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை: ஸ்மிருதி இரானி

கோப்புப்படம்

புதுடெல்லி: அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மாநில அரசு, யூனியன் பிரதேசங்களால் அமைக்கப்பட்ட குழுவால் உள்ளூர் கிராமத்திலிருந்து விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புதன்கிழமை மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதில்: அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மாநில அரசு, யூனியன் பிரதேசங்களால் அமைக்கப்பட்ட குழுவால் உள்ளூர் கிராமத்திலிருந்து விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட தகுதி மெட்ரிகுலேஷன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் பணிக்கு வயது வரம்பு 18 - 35 ஆண்டுகளாகும்.

அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கவுரவப் பணியாளர்களாக இருப்பதால், அரசாங்கத்தால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் மாதாந்திர கவுரவ ஊதியம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

முக்கிய அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியாளர்களுக்கு மாதம் ரூ.4,500 கௌரவ ஊதியம் வழங்கப்படுகிறது. குறு அங்கன்வாடிகளில் பணியாளர்கள் மாதத்திற்கு ரூ.3,500 மற்றும் உதவியாளர்களுக்கு மாதம் ரூ. 2,250 வழங்கப்படுகிறது.

மேலும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.250, பணியாளர்களுக்கு மாதம் ரூ.500 செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

கூடுதலாக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த செயல்பாட்டாளர்களுக்கு தங்கள் சொந்த ஆதாரங்களில் இருந்து கூடுதல் பண ஊக்கத்தொகை, கவுரவ ஊதியம் வழங்குகின்றன. தற்போது, அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x