Published : 14 May 2016 11:23 AM
Last Updated : 14 May 2016 11:23 AM
உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
உக்ரைன் நாட்டில் உருவாக்கப்பட்ட ‘ஆன்டனோவ்-ஏ.என் 225’ ரக விமானம் தான் தற்போது உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் என பெயரெடுத்துள்ளது. மற்ற விமானங்களை காட்டிலும் இந்த விமானத்தில் 133 டன் எடை கொண்ட ஜெனரேட்டர், 6 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இறகு களும் 88 மீட்டர் நீளத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 640 டன் எடையுடன் வானில் வசதியாக பறக்க முடியும். இதே போல் தரையிறங்க வசதியாக விமானத்தில் 32 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் இருந்தபடியே சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ முடியும் என்பது இந்த விமானத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
செக் குடியரசின் தலைநக ரான பராக்வேயில் இருந்து புறப்பட்டு மேற்கு ஆஸ்திரேலி யாவில் சரக்குகளை இறக்கு வதற்காக துர்க்மெனிஸ்தான், மலேஷியா வான் வழியாக பறந்த இந்த விமானம்வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. மிக பிரம்மாண்டமாக காட்சியளித்த இந்த விமானத்தை ஏராளமானோர் கண்டுகளித்து தங்களது செல் போன்களில் படம்பிடித்துக் கொண் டனர். ‘ம்ரியா’ என செல்லமாக இந்த விமானம் அழைக்கப்படுகிறது. இதற்கு உக்ரைன் மொழியில் கனவு என்று அர்த்தமாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT