Published : 17 Jul 2022 01:13 PM
Last Updated : 17 Jul 2022 01:13 PM

ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட இந்திய விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட இந்திய விமானம் ஒன்று அவசரமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களில் இந்திய விமானம் ஒன்று கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்படுவது இது 2வது முறையாகும்.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் IndiGo 6E-1406 விமானம் ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கராச்சியிலிருந்து பயணிகளை அழைத்துவர மாற்று ஏற்பாடாக வேறொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் இந்திய விமானம் ஒன்று கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்படுவது இது 2வது முறையாகும். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் இருந்து துபாய் சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 138 பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தின் எரிபொருள் இண்டிகேட்டர் சரியாக வேலை செய்யாததால் அது தரையிறக்கப்பட்டது.

எனவே பயணிகளை அழைத்துச் செல்ல வேறு விமானம் அனுப்பப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு அந்த விமானத்தை துபாய்க்கு அனுப்ப காலம் தாழ்த்தப்பட்டது. பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே விமானம் துபாய் புறப்பட்டுச் சென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x