Published : 14 Jul 2022 05:43 AM
Last Updated : 14 Jul 2022 05:43 AM
புதுடெல்லி: இலங்கைக்கும், தமிழகத்தின் தென்கிழக்கு கடற்பகுதியான பாம்பன் தீவுக்கும் இடையே ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுண்ணாம்புக் கற்களால் உருவான இந்த பாலம் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, இலங்கையின் மன்னார் பகுதியையும், பாக் ஜலசந்தி யையும் இணைக்க கடற்பகுதியில் 83 கி.மீபகுதிக்கு ஆழமாக கால்வாயை உருவாக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்தத் திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.மேலும் திட்டத்துக்கு எதிராக 2007-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிஉச்ச மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சேது கால்வாய் திட்டத்துக்கு தடை பெற்றார்.
அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் சேதுக் கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த ஆலோசிப்பதாகவும், ராமர் பாலம்சேதமடையாமல் இந்தத் திட்டத்தை மாற்று வழியில் செயல் படுத்த முயற்சி எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ராமர்பாலத்தை தேசிய சின்னமாகஅறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு வரும் 26-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரஉள்ளது. உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர்தலைமையிலான அமர்வு மனு விசாரிக்க உள்ளது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT