Published : 24 May 2016 10:29 AM
Last Updated : 24 May 2016 10:29 AM
‘குதிரை பேரம் நடத்தியதாக வெளியான வீடியோ தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என, உத்தராகண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் 27-ம் தேதி குடிய ரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு முன், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்களுடன் இடைத்தரகர் மூலம், முதல்வர் ஹரிஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வீடியோ வெளியானது. அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தவறான வழிகளை ஹரிஷ் ராவத் கையாளுவதாக பாஜக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக பூர்வாங்க விசாரணை நடவடிக்கைகளை சிபிஐ ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு, ராவத்துக்கு சிபிஐ சம்மனும் அனுப்பியது. ஆனால், சட்டப்பே ரவையில் நம்பிக்கை வாக்கெ டுப்பு நடைபெற்றதால், விசார ணைக்கு ஆஜராக சிபிஐ.யிடம் அவகாசம் கோரினார் ராவத்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று, மீண்டும் முதல் வர் பொறுப்பை ஹரிஷ்ராவத் ஏற்றுள்ள நிலையில், வீடியோ விவகாரம் தொடர்பான விசார ணைக்கு இன்று ஆஜராகு மாறு சிபிஐ தரப்பில் கூறப்பட் டிருந்தது.
இந்நிலையில், செய்தி நிறு வனத்துக்கு ராவத் நேற்று அளித்த பேட்டியில், ‘வீடியோ விவகாரம் தொடர்பான சிபிஐ சம்மனை ஏற்று, செவ்வாய்க் கிழமை (இன்று) டெல்லி செல்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப் பேன். அதே சமயம், பாரபட்ச மற்ற முறையில் இவ்வழக்கை நடத்த வேண்டியது சிபிஐ.யின் பொறுப்பு’ என்றார்.
இதற்கிடையே, உத்தரா கண்ட்டில் கடந்த மார்ச் 17-ம் தேதிக்கு பிறகு நிகழ்ந்த குதிரை பேரம், ‘ஸ்டிங் ஆபரேஷன்’கள் மற்றும் அரசு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, விசாரணைக் கமிஷன் அமைக்க மாநில அரசு கடந்த, 20-ம் தேதி முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT