Published : 12 Jul 2022 05:20 AM
Last Updated : 12 Jul 2022 05:20 AM

கோவாவில் 2 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் மனு

பனாஜி: கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 40-ல் 11 இடங்களில் காங்கிரஸ் வென்றது. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த மைக்கேல் லோபோ எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த திகம்பர் காமத் அதிருப்தி அடைந்தார்

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. திகம்பர் காமத், மைக்கேல் லோபோ ஆகிய இருவரும் கட்சிக்கு எதிராக சதி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பேரவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து லோபோ நீக்கப்பட்டார்.

நேற்று நடந்த எம்எல்ஏ-க் கள் கூட்டத்தில் 7 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றதாக காங்கிரஸ் தெரிவித்தது. மேலும் திகம்பர் காமத் மற்றும் மைக்கேல் லோபோ ஆகிய இருவரையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே 8 எம்எல்ஏ-க் களை இழுத்துவிட்டால் கட்சித் தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிக்கலாம் என அதிருப்தி எம்எல்ஏக்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x