Published : 21 May 2016 09:34 AM
Last Updated : 21 May 2016 09:34 AM
ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரத்தில் கடந்த வியாழக்கிழமை 51 டிகிரி செல்சியஸ் (123.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது.
இதுவரை இந்தியாவில் இந்த அளவு வெப்பம் பதிவானதில்லை. இதற்கு முன்பு 1956-ம் ஆண்டு 50.6 டிகிரி செல்சியஸ் பதிவானதே மிக அதிகபட்சமாக இருந்தது.
கோடைகாலமான மே, ஜூன் மாதங்களில் வட இந்தியாவில் பொதுவாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். ஆனால், 50 டிகிரி செல்சியஸைத் தொடுவது அபூர்வம். பலோடியில் 51 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பது, இது வரை இந்தியாவில் பதிவு செய் யப்பட்ட வெப்பநிலையிலேயே மிக அதிகம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பி.பி. யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதியில் இந்தியா வின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு நிலவிய சராசரி வெப்ப நிலையை விட 5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்ப நிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தாமதமாகும்
வரும் 27ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் வெப்ப அலை குறையத் தொடங் கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசம், குஜராத் தில் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு கடுமை யான வெப்பநிலை நிலவும். வரும் 27-31-ம் தேகிகளுக்குப் பிறகு வெப்ப அலை குறையத் தொடங்கும். இதன் பிறகு, இயல்பான வெப்ப நிலை நிலவும்.
நாட்டின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை 6 நாட்கள் தாமத மாகத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் தென் பகுதி, அந்தமான் நிகோபார் தீவு கள், வடக்கு அந்தமான் கடல் போன்ற பகுதிகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்புகள் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென்படுகிறது.
அந்தமானில் வழக்கத்தை விட 2 நாட்களுக்கு முன்பாகவே பருவ மழை தொடங்கினாலும், வங்காள விரிகுடாவில் புயல் காரணமாக, பருவமழை செயல்பாடுகள் வலுவிழக்கும். எனவே, கேரளாவில் பருவமழை தாமதமாகத் தொடங் கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT