Published : 25 Jun 2022 10:37 AM
Last Updated : 25 Jun 2022 10:37 AM

'அரசியல் சாசன உரிமைகளைப் பறித்த காங்கிரஸ்' - எமர்ஜென்சி நினைவு நாளில் சாடிய அமித் ஷா

நெருக்கடி நிலை என்ற பெயரில் அரசியல் சாசன உரிமைகளை காங்கிரஸ் பறித்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இந்தியாவில் 1975 ஜூன் 25ல் அப்போதைய இந்திரா காந்தி அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்தார். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்துவிட்டதாகக் கூறி இந்த நெருக்கடிநிலை அமலாக்கப்பட்டது. 1977 மார்ச் மாதம் வரை சுமார் 19 மாதங்கள் இந்த அவசரநிலை நீடித்தது.

இன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட 47வது நினைவுநாள். இதனை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 1975ல் இதே நாளில் காங்கிரஸ் நாட்டு மக்களுக்கான அரசியல் சாசன உரிமைகளைப் பறித்தது.

அடக்குமுறைகளில் அந்நிய ஆட்சியை மிஞ்சியது. அவசரநிலைக்கு எதிராகப் போராடி நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுத்த தலைவர்களுக்காக நான் இன்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவர்கள்தான் சர்வாதிகாரி மனம்ப்பான்மையை தோற்கடித்தனர் என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x