Published : 24 Jun 2022 06:25 AM
Last Updated : 24 Jun 2022 06:25 AM
பெங்களூரு: இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனம் நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-24 என்ற அதி நவீன செயற்கைக்கோளை வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.
இந்த ஜிசாட் 24 அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் கடந்த மே 17-ம் தேதி விமானம் மூலம் பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள பிரெஞ்ச் கயானாவின் கொரு ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கனரக ராக்கெட் ஏரியன்-5 மூலம் நேற்று செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவிநிலை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இதுகுறித்து நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் துரைராஜ் கூறுகையில், “ஜிசாட் 24 செயற்கைகோள், இந்திய விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டதாகும். ஜிசாட்-24 செயற்கைக்கோளில் க்யூ பேன்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இருப்பதால் தொலைக்காட்சி டிடிஎச் மற்றும் செல்போன் சேவைக்குப் பயன்படும். இதன் சேவைகள் அனைத்தும் ‘டாடா பிளே’ (Tata Play ) நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT