Published : 20 Jun 2022 06:38 PM
Last Updated : 20 Jun 2022 06:38 PM

‘‘அக்னிவீரர்கள்: கவலை வேண்டாம்; வேலை தர நாங்கள் தயார்’’ - வரிசை கட்டும் தொழிலதிபர்கள்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தில் 4 ஆண்டு பயிற்சி முடித்த வீரர்களுக்கு வேலை தருவதாக ஆனந்த் மகேந்திரா கூறியதைபோலவே பல தொழிலதிபர்களும் உறுதியளித்துள்ளனர். மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா மற்றும் பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா உள்ளிட்ட தொழில்துறையினர் அக்னிபாதை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்தநிலையில் அக்னிபாதை பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி வழங்குவதாக மகேந்திரா குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபதிபருமான ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருந்தார்.

ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்டுக்கு பதிலளித்த ஆர்பிஜி குழுமத் தலைவர் கோயங்கா, "ஆர்பிஜி குழுவும் அக்னிவீரர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்பை வரவேற்கிறது. மற்ற நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து இந்த உறுதிமொழியை எடுத்து, நமது இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்" என்றார்.

இதேபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில், பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார்-ஷாவும் ட்வீட் செய்துள்ளார். ‘‘தொழில்துறை வேலை சந்தையில் அக்னிவீரர்கள் திட்டம் ஒரு தனித்துவமான நன்மையைப் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.’’ எனக் கூறியு்ளளார்.

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ‘‘அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் வேலை சந்தைக்கு மிகவும் தேவையானது. இந்த பயிற்சி எடுத்த அக்னிவீரர்களுக்கு தொழில் துறை வாய்ப்பு வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

‘‘அக்னிபாதை திட்டம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பெரிதும் பங்களிக்கும்’’ என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகத்தை வலுப்படுத்துவதில் அக்னிவீரர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x