Published : 02 Jun 2022 06:05 AM
Last Updated : 02 Jun 2022 06:05 AM
ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில், அடுத்த மாதம் 3-வது வாரம் நடைபெற உள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் 3 நாட்கள் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என 300-லிருந்து 500 பேர் வரை செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கினறன.
இந்த செயற்குழு கூட்டம் ஹைதராபாத் எச்ஐசிசி நோவாட்டல் அல்லது தாஜ் கிருஷ்ணா நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT