Published : 01 Jun 2022 11:48 AM
Last Updated : 01 Jun 2022 11:48 AM
பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 53.
தமிழ் திரைப்படங்களில் சுமார் 66 பாடல்களை அவர் பாடியுள்ளார். காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.
இந்நிலையில், கலாச்சார விழா ஒன்றில் நேற்று பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிச் சென்றார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கூறி கொல்கத்தா பூ மார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் ஒப்புதலைப் பெற்று உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கூறி கொல்கத்தா பூ மார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் ஒப்புதலைப் பெற்று உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் கேகே மேடையில் ஏசி வேலை செய்யாததால் தனக்கு வியர்த்துக் கொட்டுவதாகக் கூறும் வீடியோ ஒன்றும், நிகழ்ச்சி முடிந்தத்து தனது அசவுகரியத்தை கூறி வேகவேகமாக கிளம்பிச் செல்லும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment