Published : 25 May 2016 12:07 PM
Last Updated : 25 May 2016 12:07 PM
வீட்டு உதவியாளர் பணிகளுக்காக துபாய் செல்லும் பெண்களை இடைத்தரகர்கள், கடைப் பொருளைப் போல விற்று விடுகின்றனர். இதனால், பலர் விசா முடிந்தும் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், சிறையிலும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர அமைச்சர் பல்ல ரகுநாத ரெட்டி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ரகுநாத ரெட்டி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நமது இந்திய பெண்களை சில இடைத்தரகர்கள் ஏமாற்றி துபாயில் பணிக்கு அனுப்புகின்றனர். அவர்கள் அங்கு வீட்டு வேலையில் அமர்த்தப்பட்டு பெரும் அவதிக் குள்ளாகின்றனர். இதில் சிலர் உயிரையும் இழந்துள்ளனர்.
அதிக ஊதியம் பெற்றுத் தருவ தாகக் கூறி ஏமாற்றி, கடைப் பொருளைப் போல அவர்களை விற்றுவிடுகின்றனர். சவுதி அரேபி யாவில் ரூ. 4 லட்சம் வரையிலும், மற்ற இடங்களுக்கு ரூ. 1 முதல் 2 லட்சம் வரையிலும் இந்திய கிராமப் பகுதி பெண்கள் விற்பனை செய்யப்படுகின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங் களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் அங்கு சென்று விசா காலம் முடிந்து சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதுவரை 25 பெண்களின் உறவினர்கள் தங்களின் பெண் களை மீட்டுத் தருமாறு எங்களிடம் முறையிட்டுள்ளனர். எனவே,உடனடியாக தாங்கள் தலையிட்டு அங்கு சிறையில் வாடும் பெண்களை மீட்டு சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT