Published : 27 May 2022 09:49 AM
Last Updated : 27 May 2022 09:49 AM
இந்தி நாவல் 'டாம்ப் ஆஃப் சாண்ட்' புத்தகத்துக்கு சர்வதேச புக்கர் விருது கிடைத்துள்ளது. உலகத்திலேயே இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருது புக்கர் பரிசு.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ-யின் புத்தகத்துக்கு கிடைத்துள்ளது. 80 வயது நாயகியை சுற்றி எழுப்பப்பட்ட கதை இது. இந்தி மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் ராக்வெல் என்பவர் மொழி பெயர்த்துள்ளார். பரிசுத் தொகையான 50,000 பவுண்ட் இருவராலும் பிரித்துக் கொள்ளப்படும்.
இந்தப் புத்தகத்தில் கணவரை இழந்த 80 வயது பெண் 1947ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவிணையின் போது தான் எதிர்கொண்ட மோசமான அனுபவங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசியிருக்கிறார்.
இறுதிப் போட்டியில் போலந்து நோபல் அறிஞர் ஓல்கா டோக்கர்ஜுக், அர்ஜென்டினாவின் க்ளாடியா ஃபினேரியோ, கொரியாவின் போரா சுங் ஆகியோரின் புத்தகங்கள் இருந்த நிலையில், இந்திய எழுத்தாளர் அதுவும் இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சர்வதேச புக்கர் விருது ஆண்டுதோறும், மொழியாக்கம் செய்யப்பட்ட புதினத்திற்கு வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT