Published : 25 May 2022 07:12 AM
Last Updated : 25 May 2022 07:12 AM

மத்திய பிரதேசத்தில் யாசகம் செய்து சேர்த்த ரூ.90 ஆயிரத்துக்கு மொபெட் வாங்கிய மாற்றுத் திறனாளி

போபால்: மத்திய பிரதேசத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர், யாசகம் செய்து சேர்த்த ரூ.90 ஆயிரத்துக்கு மனைவிக்காக மொபெட் வாங்கியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம், அமர்வாராவைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் சாஹு-முன்னி தம்பதி. மாற்றுத்திறனாளியான சந்தோஷுக்கு 2 கால்களும் செயல்படாது. சிந்த்வாரா நகர பேருந்து நிலையத்தில் 3 சக்கர வாகனத்தில் ஊர்ந்தபடி யாசகம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் சந்தோஷ்.

இதுகுறித்து சந்தோஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “யாசகம் கோர போகும்போது 3 சக்கர வாகனத்தை எனது மனைவி தள்ளிக் கொண்டு வருவது வழக்கம். மேட்டுப்பாங்கான பகுதியில் வண்டியைத் தள்ள அவர் மிகவும் சிரமப்படுவார். இதையடுத்து இயந்திரம் பொருத்திய 3 சக்கர வாகனம் (மொபட்) வாங்க முடிவு செய்து பணம் சேர்த்து வந்தோம். இதன்படி, ரூ.90 ஆயிரத்துக்கு ஒரு மொபட் வாங்கி உள்ளோம். இதற்கான பணத்தை சேர்க்க 4 ஆண்டுகள் ஆனது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x