Published : 21 May 2022 12:28 PM
Last Updated : 21 May 2022 12:28 PM

நாடு முழுவதும் இன்று முதுநிலை நீட் தேர்வு 

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

2022 - 23ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 2 லட்சம் பேர் இந்தத் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 256 மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், தேனி, விழுப்புரம், ஈரோடு, கரூர், விருதுநகர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சை, ராமநாதபுரம், பெரம்பலூர், நாமக்கல், நாகர்கோயில், கிருஷ்ணகிரி, கன்னியாகுமாரி, திண்டுக்கல், தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.

தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மாணவர்கள் கட்டாயம் அட்மிட் கார்டு எனப்படும் நுழைவு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும், தேர்வு எழுதுவோரின் புகைப்படம் பொருந்திய பான் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும், மின்னனு உபகரணங்களான கைக்கடிகாரம், மொபைல், கால்குலேட்டர் போன்ற பொருட்கள் எடுத்துச்செல்லக் கூடாது, தேர்வு மையத்தில் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், தேர்வு எழுதும் பொழுது கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

800 மதிப்பெண்ணுக்கு 200 கேள்விகள் என இந்த முதுநிலை நீட் தேர்வு நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு துவங்கிய இந்த தேர்வு 12.30 மணி வரை நடைபெறும். இந்திய மருத்துவ சங்கம் தரப்பில் நீட் முதுநிலை தேர்வை ஒத்தி வைக்க கோரியும், தமிழக எம்பிக்கள் சார்பில் தமிழக மாணவர்களில் சிலருக்கு வெளி மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டும் மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்படாது என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இந்நிலையில் இன்று தேர்வு நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x