Published : 20 May 2016 07:09 PM
Last Updated : 20 May 2016 07:09 PM
ஜூன் மாதம் 7-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கவுள்ளார் என்று ஊடகச் செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜூன் 8-ம் தேதி பேச அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஊடகச் செயலர் ஜோஷ் எர்னஸ்ட் அறிக்கை ஒன்றில் கூறும்போது, “மோடி-ஒபாமா சந்திப்பு இந்திய-அமெரிக்க உறவுகளை இன்னும் ஆழப்படுத்துவதாக அமையும். வானிலை மாற்றம், சுற்றுச்சூழல் காப்பு, எரிசக்தி கூட்டுறவு, பாதுகாப்பு கூட்டுறவு மற்றும் பொருளாதார வளர்ச்சி முன்னுரிமைகள் போன்ற விவகாரங்கள் குறித்து மோடியுடன் விவாதிக்க அதிபர் ஒபாமா ஆர்வமாக இருக்கிறார்.
செப்டம்பர் 2014-க்குப் பிறகு பிரதமர் மோடி 2-வது முறையாக வெள்ளை மாளிகைக்கு வருகை தருகிறார்.
சீனாவின் செல்வாக்கு ஆசியாவில் வளர்ந்து வருவதையடுத்து, பிரதமர் மோடியை முன்வைத்து அமெரிக்கா இந்தியாவுடன் வலுவான உறவுகளை அமைத்துக் கொள்ள விரும்பி வருகிறது.
அதாவது இந்தியா என்பது, அமெரிக்க குடியரசுக் கட்சி செய்தித் தொடர்பாளர் பால் ரயான் கூறுவது போல், “மிக மிக முக்கியமான பகுதியில் இருப்பதால், இந்தியா-அமெரிக்க உறவுகள் நெருக்கமடைவது அடைவது தூண் போன்ற ஸ்திரத்தன்மையை கொடுக்கவல்லது”.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT