Published : 02 May 2016 08:46 AM
Last Updated : 02 May 2016 08:46 AM
பிரதமரின் தங்க சேமிப்பு திட்டத்தில் 7.5 டன் நகைகளை டெபாசிட் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு தினசரி ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனத் துக்காக வருகின்றனர். உண்டி யலில் அவர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் ஆண்டு தோறும் சராசரியாக ஒரு டன் தங்கம் வரை வருவாயாக கிடைத்து வருகிறது.
இந்த தங்கத்தை பல்வேறு தேசிய வங்கிகளில் முதலீடு செய்து, அதற்கு வட்டியாக தங்கத்தையே தேவஸ்தானம் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமரின் தங்க சேமிப்பு திட்டத்திலும் தங்க நகைகளை டெபாசிட் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஹைதராபாத்தில் நேற்றுமுன் தினம் நிருபர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம் பசிவ ராவ் தெரிவித்தார்.
மேலும் அவர், ‘‘பிரதமரின் தங்க சேமிப்பு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டு மென மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். இத்திட்டத்தில் 3 வகைகள் உள்ளன. குறுகிய காலம், நடுநிலை காலம், நீண்ட கால வைப்பு திட்டங்கள் உள்ளன.
குறுகிய கால திட்டத்தில் டெபாசிட் செய்தால், வட்டியை தங்கமாகவோ அல்லது பணமாகவோ பெற்று கொள்ள லாம். எங்களுக்கு வட்டியாக தங்கம் மட்டுமே வேண்டும் என கடிதம் மூலம் தெரி வித்துள்ளோம். உரிய பதில் கிடைத்தவுடன் பிரதமரின் தங்க சேமிப்பு திட்டத்தில் 7.5 டன் தங்க நகைகள் டெபாசிட் செய்யப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT