Published : 09 May 2022 06:47 AM
Last Updated : 09 May 2022 06:47 AM
அமராவதி: வெளிநாட்டு பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில், குற்றவாளிகளுக்கு57 நாட்களுக்குள் ஆந்திர போலீஸார் தண்டனை பெற்றுத்தந்துள்னர்.
லிதுவேனியா நாட்டைச் சேர்ந்தபெண் ஒருவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வனப் பகுதி வழியாக கடந்த மார்ச் 8ம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது இருவர் அவரை வழிமறித்து மானபங்கம் செய்ய முயன்றனர். ஆனால் அந்தப் பெண் தப்பித்து இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்தார்.
3 மணி நேரத்துக்குள் இரண்டு குற்றவாளிகளையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது,நீதிமன்றத்தில் மார்ச் 16ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பெண் தனது தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதால், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது என ஆந்திரா டிஜிபி கூறினார். விசாரணை 3 நாளில் நிறைவடைந்தது. ஆதாரங்களை பரிசோதிப்பதை நெல்லூர் செசன்ஸ் நீதிமன்றம் ஒரே நாளில் முடித்தது.
7 ஆண்டு சிறை, ரூ.15000 அபராதம்
இருதரப்பு வாதங்களையும், கடந்த ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் கேட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. குற்றவாளிகள் சாய் குமார் மற்றும் சையது முகமது அபித் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்பட்டு ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்று தந்ததற்காக லிதுவேனியா பெண், ஆந்திர டிஜிபிக்கு வீடியோ தகவல் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிஜிபி ராஜேந்திரநாத் கூறுகையில், ‘‘முறையான ஒருங்கிணைப்பு மூலம் குற்றவியல் நீதி முறை திறம்பட செயல்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு உதாரணமாக திகழ்கிறது. இவ்வளவு குறைவான நாட்களுக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தது, ஆந்திராவில் மட்டும் அல்ல நாட்டிலேயே முதல் முறை. முழுமையான அணுகுமுறையில் கவனம்செலுத்த நாங்கள் பல நடவடிக்கைகள் எடுக்கிறோம். இதனால்நீதி கிடைப்பது விரைவுபடுத்தப் பட்டுள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தி, சாட்சியாளர்கள் எதிராக மாறுவதையும் குறைக்கிறது. இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணை நடை முறைகளுக்குப் பிறகு, மிக விரை வாக தீர்ப்பு பெற்று தந்ததில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம். போலீஸ் துறை, வக்கீல்கள் மற்றும் நீதித்துறை இடையே மிக பிரம்மாண்டமான ஒருங் கிணைப்பை இந்த வழக்கு எடுத்துக் காட்டுகிறது’’ என்றார்.
குற்ற வழக்கில், குற்றவாளிக்கு, சம்பவம் நடந்த 57 நாட்களுக்குள், நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்து ஆந்திர போலீசார் புதிய வரலாறு படைத்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு, 92.21 சதவீத போக்சோ மற்றும் பாலியல்வன்கொடுமை வழக்குகளில், ஆந்திர போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT