Published : 03 May 2022 06:19 AM
Last Updated : 03 May 2022 06:19 AM
புதுடெல்லி: நாட்டில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
நாட்டில் கோடை வெயில் தற்போது மக்களை வாட்டி வதைத்துவருகிறது. இதனால் மின்சாரத்தின் தேவை முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேவேளையில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மின்வெட்டு பிரச்சினையை சந்தித்து வருகின்றன.
டெல்லி தலைநகரப் பிராந்தியத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் கடும் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக டெல்லி அரசுஏற்கெனவே கூறியுள்ளது.
ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் கடந்த வெள்ளிக் கிழமை மத்திய மின்சாரத் துறைஅமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து, தங்கள் மாநிலத்துக்கு மத்தியமின்தொகுப்பில் இருந்து கூடுதல்மின்சாரம் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதே கோரிக்கையுடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் டெல்லி வருகை தந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஆகியோரை அவர் சந்தித்தார். உ.பி.க்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், உ.பி. அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு வரும் ரயில்வே வேகன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மின்வெட்டு பிரச்சினை தொடர்பான உயர் நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிமற்றும் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிலக்கரி கையிருப்பு மற்றும் பற்றாக்குறை நிலவரம், பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு நிலக்கரியை விரைவாக கொண்டு சேர்ப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு
உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை நிலவரம், குற்ற நிலவரம், மனித உரிமைகள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2020 -2021-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமீபத்தில் வெளி யிட்டது. அதில், ‘‘கடந்த 2020-ம் ஆண்டில் நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது. தீவிரவாத ஊடுருவல் கணிசமாக குறைக்கப்பட்டது’’ என்று தெரி வித்துள்ளது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT