Published : 02 May 2022 09:57 PM
Last Updated : 02 May 2022 09:57 PM
பெர்லின்: ஜெர்மனி கூட்டமைப்புக் குடியரசின் பிரதமர் ஓலஃப் ஷோல்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தியா – ஜெர்மனி இடையே, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரசுகளுக்கு இடையேயான ஆறாவது சுற்று ஆலோசனைகளுக்கு முன்னதாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
முன்னதாக ஜெர்மனி பிரதமர் மாளிகை வளாகத்தில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் அன்புடன் வரவேற்றார். இதன்பின்னர் இரு தலைவர்களும் நேருக்கு நேர் என்ற முறையில் சந்தித்தனர். இதைத் தொடர்ந்து தூதுக்குழு நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ராணுவ ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய போக்குகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த முக்கிய விஷயங்கள் அவர்களின் விவாதத்தில் இடம்பெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT