Published : 01 May 2022 11:23 AM
Last Updated : 01 May 2022 11:23 AM
புதுடெல்லி: இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:
இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரத்து 188 ஆக உயர்ந்தது.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,876 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 36 ஆயிரத்து 253 ஆக உயர்ந்தது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,092 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 408 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 189 கோடியே 17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 25,95,267 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 26ந் தேதி பாதிப்பு 2,483 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்கள் பாதிப்பு உயர்ந்து நேற்று 3,688 ஆக இருந்தது. இந்தநிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரத்து 188 ஆக உயர்ந்தது.
டெல்லியில் அதிகபட்சமாக 1,520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஹரியாணாவில் 490, கேரளாவில் 337, உத்தர பிரதேசத்தில் 275, மகாராஷ்டிரத்தில் 155, கர்நாடகாவில் 126 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று 4,71,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.79 கோடியாக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT