Published : 01 May 2022 06:24 AM
Last Updated : 01 May 2022 06:24 AM
மும்பை: யெஸ் வங்கி - டிஹெச்எப்எல் பண மோசடி வழக்கு தொடர் பாக மும்பை மற்றும் புனேயில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர்கள் அஸ்வினி போன்சலே, ஷாஹித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகிய மூவருக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இவர்களின் நிறுவனம் வழியாக, யெஸ் வங்கி - டிஹெச்எப்எல்நிறுவனத்தின் பணம் முறைகேடாகபரிவர்த்தனை செய்யப்பட்டிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையை சிபிஐமேற்கொண்டதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ரேடியஸ் டெவலப்பர்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் சாப்ரியாவை இரு தினங்களுக்கு முன்பு சிபிஐ கைது செய்தது.
ஷாஹித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகிய இருவர் ஏற்கனவே 2ஜி வழக்கில்கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் பண மோசடி வழக்கில் மீண்டும் அவர்கள் வீட்டை சிபிஐ தட்டியுள்ளது.
யெஸ் வங்கி இணை நிறுவனர்ராணா கபூர், மக்கள் வைப்புத் தொகையை தகுதியற்ற நிறுவனங்களுக்கு கடனாக வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது 2020-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
ரூ.5,050 கோடி மோசடி
யெஸ் வங்கி இணை நிறுவனர்ராணா கபூர், டிஹெச்எப்எல் நிறுவனத்தின் கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகிய மூவர் கூட்டுச் சதி செய்து ரூ.5,050கோடியை மோசடி செய்துள்ளனர்என்றும், அந்தப் பணத்தை முறைகேடாக மடைமாற்றியுள்ளனர் என்றும் அமலாக்கத் துறை இம்மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்த இரண்டாம் நிலை குற்றப் பத்திரிகையில் தெரிவித்தது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT