Published : 03 May 2016 10:50 AM
Last Updated : 03 May 2016 10:50 AM
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அணைக்கு துப்பாக்கி ஏந்திய ஆட்களை பாதுகாப்புக்கு நியமித் துள்ளது உள்ளூர் நகராட்சி நிர்வாகம்.
வடமாநிலங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழையும் பொய்த்துப் போனதால், பிஹார், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 4 முக்கிய நீர்நிலைகள் வற்றி விட்டன.
இதனால், மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந் நிலையில், தண்ணீர் தேங்கியிருக் கும் ஓர் அணையில் துப்பாக்கி ஏந்திய ஆட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அணையில் இருந்து தண்ணீரை யாரும் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லாதபடி 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ம.பி.யின் டிகாம்கர் மாவட்டத் தில் உள்ள இந்த அணையைப் பாதுகாக்க உள்ளூர் நகராட்சி நிர்வாகம், புருஷோத்தம் சிரோகி என்பவரை நியமித்துள்ளது. அவர் கூறுகையில், ‘‘இந்தப் பகுதியில் தங்கத்தை விட இப்போதைக்கு தண்ணீர்தான் விலைமதிப்பற்றது. எனவே, 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.
டிகாம்கர் பகுதியில் 4 நாட் களுக்கு ஒரு முறை 2 மணி நேரம் மட்டும் குழாய்களில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய ஆழ்துளை கிணறுகளை தோண்ட உள்ளூர் நகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. 100 அடி ஆழத்துக்கு தோண்டினாலும் தண்ணீர் வருவதில்லை’’ என்றனர்
டிகாம்கர் பகுதியை சுற்றியுள்ள தர்காய் குர்ட் போன்ற கிராமங்களிலும் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ‘‘வெயில் 45 டிகிரி செல்சியஸை தாண்டி உள்ளது. பயிர்கள் காய்ந்துவிட்டன. இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது’’ என்று இப்பகுதி மக்கள் சோகத்துடன் கூறுகின்றனர்.
‘‘கடந்த 2 பருவ மழையும் பொய்த்துவிட்டதால், நாட்டில் 33 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ள னர்’’ என்று மத்திய அரசு தெரிவித் துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT