Published : 29 Apr 2022 05:57 AM
Last Updated : 29 Apr 2022 05:57 AM

10-ம் வகுப்பு வினாத் தாள்கள் ஆந்திராவில் 2-வது நாளாக கசிவு

அமராவதி: ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு மற்றும் ஹிந்தி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்ததால் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. முதல் நாள் தெலுங்கு தேர்வு நடைபெற்றது. தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் காகுளம், சித்தூர், கர்னூல், விஜயவாடா உள்ளிட்ட மாவட்டங்களில் பல தேர்வு மையங்களில் இருந்து வினாத் தாள்கள் வெளியில் கசிந்தன. இவை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி, 10 ஆசிரியர்கள், 4 கண்காணிப்பாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், வினாத் தாள் வெளியாக வில்லை. சிலர் வேண்டுமென்றே செல்போனில் வினாத் தாளை புகைப்படம் எடுத்து வெளி யிட்டுள்ளனர் என்று அரசு தரப் பில் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஹிந்தி தேர்வு நடந்தது. தேர்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சித்தூர், காகுளம், விஜயநகரம் உள் ளிட்ட பல மாவட்டங்களில் ஹிந்தி வினாத் தாள் கசிந்தது. இதுவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்தும் விசாரணை நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x