Published : 28 Apr 2022 10:37 AM
Last Updated : 28 Apr 2022 10:37 AM

'ஆன்மாவுக்கான ஆகாரம்' - சர்வதேச விருதை வென்ற காஷ்மீர் கபாப் வியாபாரியின் புகைப்படம்

விருதை வென்ற புகைப்படம்

காஷ்மீர் கபாப் வியாபாரியின் புகைப்படம் ஒன்று சர்வதேச புகைப்பட விருதினை வென்றுள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உணவு புகைப்படக்கார்களுக்கு பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கான போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக உலகம் முழுவதும் 60 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் குவிந்துள்ளன. இவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தேபதத்தா சக்ரபோர்தி, காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கய்யாம் சவுக் பகுதியில் ஒரு பிரபல கபாப் வியாபாரியின் புகைப்படத்தை எடுத்து போட்டிக்காக அனுப்பியிருந்தார்.

அவரது அந்தப் புகைப்படம் 2022 ஆம் ஆண்டுக்கான பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர் விருதை வென்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சக்ரபோர்தி தனது புகைப்பட்டத்தில் கெபாபியானா என்று பெயர் வைத்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் க்ரில் அடுப்பில் இருந்து எழும் புகைக்கு மத்தியில் தகிக்கும் கபாப் உணவும், அதைத் தயாரிப்பவரின் உணர்வும் ஜொலிக்கின்றன.

இந்தப் புகைப்படத்தைப் பற்றி பிங்க் லேடி ஃபுட் ஃபோட்டோகிராஃபர் அமைப்பின் நிறுவனர் கரோலின் கேன்யான், "அந்தப் படத்தில் ஸ்கூவர்களில் இருந்து நெருப்பு தெறிக்கிறது. அதைப்பார்க்கும் போதே இறைச்சி வேகும் வாசனையை நம்மால் உணர முடிகிறது. அந்த உணவின் சுவையை கற்பனை செய்து பார்க்க முடிகிறது. மிகவும் நளினமான அந்தப் புகைப்படம் சக்தி வாய்ந்தது. ஆன்மாவுக்கான ஆகாரம் அது" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x