Published : 25 Apr 2022 06:19 AM
Last Updated : 25 Apr 2022 06:19 AM
மும்பை: காந்தி குடும்பத்தாரிடமிருந்து பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி, அப்போதைய மத்திய அமைச்சர் முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் தெரிவித்துள்ளார்.
பணமோசடி வழக்கில் மார்ச்2020-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் நிறுவனரும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராணா கபூர் தற்போதுநீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுஉள்ளார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் செய்ததன் மூலம்ராணா கபூர், யெஸ் வங்கியின் இணை நிறுவனர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் பைனான்ஸ் (டிஎச்எப்எல்) விளம்பரதாரர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர் ரூ.5,050 கோடி மதிப்பிலான நிதியை மோசடி செய்ததாக அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது.
சமீபத்தில் அவர்கள் மீதுஅமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தியிடம் இருந்து எம்.எஃப் ஹுசைன் ஓவியத்தை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஓவியத்தை விற்ற பணத்தை காந்தி குடும்பத்தினர் நியூயார்க்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தியதாகவும், யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர், அமலாக்க இயக்குநரகத்திடம் தெரிவித்துள்ளதாக குற்றப்பத் திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில் யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர் தெரிவித்திருப் பதாவது:
ரூ.2 கோடி மதிப்புள்ள எம்.எஃப். ஹுசைன் ஓவியத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்திவதேராவிடமிருந்து வாங்குமாறுஅப்போதைய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன்.
இதை வாங்குவதால் காங்கிரஸ் தலைவர்கள் குடும்பத்துடனான நெருக்கமும் அதிகரிக்கும். அதே நேரத்தில் பத்ம பூஷண் விருது பெறவும் உதவும் என்று முரளி தியோரா தெரிவித்தார்.
என்னிடமிருந்து வாங்கிய அந்தப் பணம் பின்னர் நியூயார்க்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் மறைந்த முரளி தியோரா என்னிடம் ரகசியமாகத் தெரிவித்தார்.
ஆனால் முரளி தியோரா எனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த ஒப்பந்தத்தை முடிப்பதற்கான சம்பிரதாயங்கள் பிரியங்கா காந்தி வதேராவின் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் நான் அப்போது சந்தித்ததில்லை.
சோனியா காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான அகமது படேல், சோனியா காந்திக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தகுந்த நேரத்தில் காந்தி குடும்பத்திற்கு ஆதரவளித்ததன் மூலம், நான் (ராணா கபூர்) காந்தி குடும்பத்துக்கு ஒரு நல்ல செயலைச் செய்தேன் என்றும், ‘பத்ம பூஷண்’ விருதுக்கு உங்கள் பெயர் முறையாக பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த ஓவிய விற்பனை கட்டாய விற்பனை என்று முதலில் கூற விரும்புகிறேன். அதை நான் வாங்க தயாராகவே இல்லை.
பிரியங்கா காந்தியிடமிருந்து எம்.எஃப். ஹுசைன் ஓவியத்தை வாங்க செய்ய வற்புறுத்துவதற்காக முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா எனது வீடு மற்றும் அலுவலகத்துக்கு பலமுறை வந்துள்ளார். இது தொடர்பாக அவர் பல மொபைல் எண்களில் இருந்து எனக்கு பல அழைப்புகள் மற்றும்குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். உண்மையில், அந்த ஓவியத்தை வாங்க நான் மிகவும் தயங்கினேன். இவ்வாறு ராணா கபூர் அதில் கூறியுள்ளார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT