Published : 18 Apr 2022 07:20 AM
Last Updated : 18 Apr 2022 07:20 AM

நாட்டு மக்களிடம் மதவெறி அதிகரிக்கவில்லை: முக்தார் அப்பாஸ் நக்வி விளக்கம்

புதுடெல்லி

டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த மத ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதலில் போலீஸார் பலர் காயமடைந்தனர்.

இதேபோல, சமீபத்தில் வேறுசில மாநிலங்களிலும் மத மோதல்கள் தொடர்பான செய்திகள்வந்தன. இந்த சம்பவங்கள்குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மத்திய அமைச்சர் முக்தார்அப்பாஸ் நக்வி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டின் அமைதியையும் வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில சக்திகள், இந்தியாவின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தையும் உறுதிப்பாட்டையும் இழிவுபடுத்த முயற்சிக்கின்றன. மக்களிடம் மதவெறி அதிகரித்துவிட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை.

தங்களது நம்பிக்கைகளைப் பின்பற்ற ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திரம் உள்ளது. மக்கள் என்ன சாப்பிட வேண்டும் அல்லதுசாப்பிடக்கூடாது என்று சொல்வதுஅரசின் வேலையல்ல. தங்களுக்கு விருப்பமான உணவை உண்ண குடிமக்களுக்கு உரிமைஉள்ளது. ஹிஜாப் அணிவது இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.

ஆனால், ஒரு கல்லூரியில்,நிறுவனத்தில் உடை கட்டுப்பாடுகள் இருந்தால் அங்கு சேருவோர் அதைப் பின்பற்ற வேண்டும். விருப்பமில்லாவிட்டால் வேறு இடங்களில் சேரலாம்.

இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x
News Hub
Icon