Published : 10 Apr 2016 12:03 PM
Last Updated : 10 Apr 2016 12:03 PM
ஆந்திராவில் இருந்து செம்மரங்களை கடத்தி வந்த சீன வியாபாரி லிங் டாங் பூ என்பவரை சித்தூர் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டி எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தலை தடுக்க ஆந்திர போலீஸார் அண்மை காலமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 8-ம் தேதி செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த பிரசாத் நாயக் என்பவரை சித்தூரில் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பதியில் வெட்டப்படும் செம்மரங்கள் சீனாவுக்கு கடத்தப்படுவதும், அந்நாட்டின் லிங் டாங் பூ என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த சீன கடத்தல் வியாபாரி பெங்களூருவில் பதுங்கி இருக்கும் தகவலும் கிடைத்தது.
இதையடுத்து பெங்களூ ருவுக்கு விரைந்த சித்தூர் போலீஸார், சீன வியாபாரி லிங் டாங் பூவை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 செம்மரங்கள், ரூ.22 ஆயிரம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சிகள், பாஸ்போர்ட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லிங் டாங் பூவை மாவட்ட நீதிபதி 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT