Published : 11 Apr 2022 07:01 AM
Last Updated : 11 Apr 2022 07:01 AM

மாற்றுத் திறனாளி மாணவரை தூக்கி சென்ற தோழிகள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஆலிப் முகமது.கேரளாவின் சாஸ்தாம் கோட்டாவில் உள்ள டி.பி. கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படிக்கிறார்.

இவரது கல்லூரியில் கலை விழாநடந்தது. அதில் பங்கேற்க முன்னாள் மாணவரும், புகைப்பட கலைஞருமான ஜகத் துளசிதரன் சென்றுள்ளார். அப்போது, அவர்கண்ட காட்சி அவரது மனதை நெகிழ வைத்தது. நடக்க முடியாதஆலிப் முகமதுவை, அவனுடன் பயிலும் சக தோழிகள் ஆர்யா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவர்,சிரித்த முகத்துடன் தூக்கி வருகின்றனர். தோழிகளின் தோளில் கைகளை தாங்கியபடி ஆலிப் முகமதுவும் இன்முகத்துடன் வருகிறார். இந்த காட்சியை ஜகத் துளசிதரன் தனது கேமராவில் பதிவு செய்தார்.

அந்த வீடியோ காட்சியை இந்த மாணவர்களிடம், ஜகத் துளசிதரன் காட்டியபோது, அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த வீடியோ காட்சியை ஆலிப் முகமது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதற்கு படவிளக்கமாக ‘‘அருமையான நண்பர்களுடன் இணைந்து தண்ணீர் குடித்தால்கூட, அது இனிக்கும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து ஆலிப் முகமது கூறுகையில், ‘‘எனக்கு, வாழ்க்கை எப்போதும் நண்பர்களுடன்தான். எனது நண்பர்களுடன் சேர்ந்துதான் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்கிறேன். எனது நண்பர்கள்தான் என்னை தூக்கி கொண்டுகல்லூரி வளாகத்தில் வலம் வருவர். குறைபாடு உடையவனாக என்னை, என் நண்பர்கள் எப்போதும் உணர வைத்ததில்லை. எனதுதோழிகள், என்னை தூக்கி செல்லும்இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று’’ என்றார்.

பாலின வேறுபாடுகளை கடந்து நட்புக்கு இலக்கணமாக திகழும் இந்த கல்லூரி நண்பர்களின் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x