Published : 03 Apr 2022 05:21 AM
Last Updated : 03 Apr 2022 05:21 AM

காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா கருத்து

இஸ்லாமாபாத்

காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளில் ஏதாவது ஒரு வகையில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உக்ரைன், ரஷ்யா இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். போரினால் உக்ரைனின் பாதி பகுதிஅழிந்துள்ளது. சிறிய நாடான உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்திருப் பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது. அதேநேரம் அமெரிக்காவுடன் நீண்ட காலமாக நட்புறவு பேணப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஜப்பானுடனும் நல்லுறவை பேணி வருகிறோம்.

காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சினை களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். பழைய கசப்புணர்வுகளை மறந்து இரு நாடுகளும் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இந்திய, சீன எல்லைப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசின் செயல்பாடு திருப்திரமாக இல்லை. எனினும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் நாங்கள் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x