Last Updated : 03 Apr, 2022 06:47 AM

3  

Published : 03 Apr 2022 06:47 AM
Last Updated : 03 Apr 2022 06:47 AM

ஹலால் இறைச்சி விற்ற கடைக்காரர் மீது தாக்குதல்: ஷிமோகாவில் பஜ்ரங் தளம் அமைப்பினர் 5 பேர் கைது

பெங்களூரு

கர்நாடகாவில் ஹிஜாப் தடையைதொடர்ந்து ஹலால் இறைச்சிக்கும் தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்துக்கள் முஸ்லிம்களின் கடைகளில் இறைச்சி வாங்கு வதை தவிர்க்குமாறு விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ன வேதிகே உள்ளிட்ட‌ அமைப்பினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உகாதி பண்டிகை காலத்தில் நோட்டீஸ் வழங்கி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முஸ்லிம் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஷிமோகா மாவட்டத்தில் ஹொச மனைப் பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஆட்டிறைச்சி கடைக்கு சென்ற பஜ்ரங் தளம் அமைப்பினர் ஹலால் செய்யாத இறைச்சியை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி கடையை சூறை யாடியுள்ளனர். இதே போல ஓல்ட் டவுனில் ஹலால் இறைச்சியை விற்றதாக முஸ்லிம் இறைச்சி வியாபாரியும் தாக்கப்பட்டார்.

இறைச்சி கடைகள் மூடல்

இதனிடையே பத்ராவதியில் உள்ள ஜனதா உணவகத்தில் ஹலால் செய்யப்பட்ட உணவை விற்பனை செய்ததாக பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்த வடிவேலு, சஞ்சீவ் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கடைக்காரர் தவுசீஃபை தாக்கியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் நேற்று பத்ராவதியில் முஸ்லிம் இறைச்சி கடைகள் சுமார் 4 மணி நேரம் மூடப்பட்டன.

இந்நிலையில் முஸ்லிம் இறைச்சி கடைக்காரரை தாக்கிய தாக ஹொசமனை போலீஸார் பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்த கிருஷ்ணா சவாய் சிங், குண்டா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக ஷிமோகா மாவட்ட காவல் கண் காணிப்பாளர் லட்சுமி பிரசாத் தெரிவித்தார்.

இந்துக்களிடம் பொருட்கள்..

இந்துக்களின் கோயில் திருவிழாக்களிலும், இந்து அற நிலையத் துறைக்கு சொந்தமான இடங்களிலும் முஸ்லிம்கள் கடைஅமைக்க அனுமதி மறுக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில் பாஜக தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி, ‘‘இந்துக்களின் கடைகளில் முஸ்லிம்கள் உணவுப் பொருட் களை வாங்காத போது, இந்துக்கள் மட்டும் ஏன் முஸ்லிம் கடைகளில் இறைச்சி வாங்க வேண்டும்?''என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கர்நாடகாவில் முஸ்லிம் மத குருக்கள் மற்றும் மத தலைவர்க‌ளை கட்டுப்படுத்தும் அமைப்பான ஜமியத் உலமா ஐ ஹிந்த் வெளியிட்ட அறிக்கையில் "ஹலால் உணவு குறித்து தவறானபுரிதல் காரணமாக முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொள்வது தவறானது. ரம்ஜான் பண்டிகையின் போது முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத இந்து, கிறிஸ்துவர் உள்ளிட்டோரின் கடைகளின் பொருட்களை வாங்க வேண்டும். முஸ்லிம்களின் பெயரில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை அனைவரும் புறந்தள்ள வேண்டும்''என குறிப்பிட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x